இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருந்தால், கிறிஸ்துமஸை மத்திய அரசு தேசிய விடுமுறையாக அறிவிக்க இயலுமா என, மம்மதா பேனர்ஜ் கேள்வியெழுப்பி உள்ளார்.
நேற்று மாலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மம்மதா, மத்திய அரசு கிறிஸ்துமஸ் விழாவிற்கு தேசிய விடுமுறை அறிவிக்குமா, இந்தியாவில் சம தர்மமானது பின்பற்றப்படுகின்றதா, கிறிஸ்தவர்கள் அப்படி என்னக் கொடுமை செய்தனர், இதை நான் கடந்த ஆண்டும் கூறினேன். பாஜக அரசு வந்ததும், அனைத்தையும் மாற்றிவிட்டது. ஒரு சிலக் கட்சிகளால், நம் நாட்டினைப் பிளவுப் படுத்த முடியும். நம் மாநிலத்தினைப் பொறுத்த வரையில், கிறிஸ்துமஸ் பண்டிகையானது, மாநில விடுமுறையுடன் கொண்டாடப்படும்.
கிறிஸ்துவர்களின் உணர்வுகளை, மத்திய அரசு மதிப்பதில்லை. நாம் நம்முடைய அரசியலமைப்பினை பின்பற்றுகின்றோம். மதிக்கின்றோம். ஆனால், அதற்கு தற்பொழுது மதிப்பு இல்லாமல் போய்விட்டது. அதனை அவர்கள் மதிப்பில்லாமல் ஆக்கி வருகின்றனர். நாம் என்றும் சமத்துவத்தினையும், ஒற்றுமையினையும் விரும்புகின்றோம் என, மம்மதா பேசியுள்ளார்.