டெல்லியில் நடைபெற்றது திட்டமிட்டப் படுகொலை! மம்மதா கடும் தாக்கு!

03 March 2020 அரசியல்
mamatabanerjee.jpg

டெல்லியில் நடந்த கலவரமானது, ஒரு திட்டமிட்டப் படுகொலை என, மம்மதா பேனர்ஜி கடுமையாகப் பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை ஆகும். இதற்குத் தற்பொழுது வரை, பாஜகவிடம் இருந்து ஒரு மன்னிப்புக் கூட வரவில்லை. அதுமட்டுமின்றி, இங்கே வந்து வெட்கமில்லாமல், மேற்கு வங்கத்தினைக் கைப்பற்றுவோம் எனக் கூறுகின்றனர். எனக் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் தேவையற்ற கலவரத்தையும், பிரச்சனைகளையும் மம்மதா தூண்டி விடுகின்றார் என, பாஜக பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசியிருந்தார். அதுக் கருத்துத் தெரிவித்த மம்மதா, டெல்லியில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பாஜக அரசியல்வாதிகள் பேசினார்கள். ஆனால், அதைப் பற்றியெல்லாம், அமித் ஷா கண்டு கொள்ளவில்லை. ஆனால், இங்கு வந்து நம்மை குறைகூறுகின்றார்.

வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய பாஜகவினரை, ஏன் இதுவரைக் கைது செய்யவில்லை. பலர் இந்த கலவரத்தில் இறந்துள்ள நிலையில், இன்னும் ஏன் அவர்கள் கைது செய்யப்படவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

HOT NEWS