மம்மதா சவால்! குடியுரிமை சட்டம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தத் தயாரா?

20 December 2019 அரசியல்
mamatabanerjee12.jpg

கடந்த மூன்று நாட்களாக, மேற்கு வங்கத்தில், போராட்டம் மற்றும் பேரணி உட்பட செயல்களை, திருத்தப்பட்ட தேசிய குடியுரிமை மசோதாவிற்கு எதிராக செல்வி மம்மதா பேனர்ஜி செய்து வருகின்றார்.

நாடு முழுவதும், தற்பொழுது திருத்தப்பட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு நிலவி வருகின்றது. தொடர்ந்து, போராட்டங்களும் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், கொல்கத்தாவில் பேரணி நடத்தி வருகின்றார் மேற்கு வங்க முதல்வர் மம்மதா பேனர்ஜி.

அவர் பேசுகையில், இந்த சட்டத் திருத்தம் தொடர்பாக, பொது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசுத் தயாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையிலேயே, பாரதிய ஜனதா கட்சிக்குத் தைரியம் இருந்தால், ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில், இந்தியா முழுவதும், இந்த சட்டத் திருத்தம் தொடர்பாக தேர்தல் நடத்தத் தயாரா எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒரு வேளை இந்த வாக்கெடுப்பில் பாஜக தோல்வி அடைந்தால், மோடி தன்னுடைய பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் பேசிய மம்மதா நான் இருக்கின்ற வரை, மேற்கு வங்கத்தில் இந்த திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவினை அனுமதிக்கப் போவதில்லை எனக் கூறியுள்ளார்.

HOT NEWS