என் பிணத்தினைத் தாண்டித் தான் குடியுரிமை மசோதாவினை அமல்படுத்த முடியும்!

17 December 2019 அரசியல்
mamatabanajee.jpg

மேற்கு வங்கத்தில், தேசிய குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கொல்கத்தாவில் நடைபெற்ற கண்டப் பேரணியின் பொழுது பேசிய மம்மதா பேனர்ஜி, மேற்கு வங்கத்திற்குள் வன்முறையைத் தூண்டி விடுவதற்காக, பலர் பாஜகவிடம் பணம் வாங்கிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். மேலும், இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் நண்பர்கள் எனக் கூறிக் கொண்டு, பலரும் மேற்கு வங்கத்திற்கு வெளியே சதி வேலைகளை செய்து வருகின்றனர்.

என்னுடைய அரசாங்கத்தை மத்திய அரசு கலைத்தாலும் சரி, நான் உள்ளவரை, என் உயிர் உள்ளவரை, புதியதாக உருவாக்கப்பட்ட தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவினை அமல்படுத்த மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

தான் ஜனநாயக முறைப்படி, தொடர்ந்து இந்த சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துவேன். டெல்லியில் உள்ள மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

HOT NEWS