மேற்கு வங்கத்தில் கொரோனா ஊசி இலவசம்! மம்மதா அறிவிப்பு!

12 January 2021 அரசியல்
mamatadidi.jpg

மேற்கு வங்க மாநில அரசானது, பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை வழங்க, நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அம்மாநில முதல்வர் மம்மதா பேனர்ஜி அறிவித்து உள்ளார்.

அந்த மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தலானது, நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில், பாஜகவிற்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் தான் கடுமையானப் போட்டி நிலவி வருகின்றது. இந்தத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெரும் என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், பொதுமக்களுக்குப் பல அறிவிப்புகளையும், சலுகைகளையும் அம்மாநில முதல்வர் மம்மதா பேனர்ஜி தெரிவித்து வருகின்றார்.

அவர் தற்பொழுது பேசுகையில், மேற்கு வங்க மாநில அரசு, தன்னுடைய மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளார். வருகின்ற ஜனவரி 14ம் தேதி அன்று அம்மாநிலத்தில் முதல்நிலைக் களப்பணியாளர்களான சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும், அவர்களைத் தொடர்ந்து ஜனவரி 16ம் தேதி முதல் பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அவர் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS