உலகத்திலேயே பாஜகவினை விட மிகப் பெரியத் திருடனே இல்லை என, மேற்கு வங்க முதல்வர் மம்மதா பேனர்ஜி தெரிவித்து உள்ளார்.
மேற்கு வங்கத்தில் தற்பொழுது தேர்தல் களமானது நெருங்கி வருகின்றது. இதனையொட்டி, பாஜகவினர், மேற்கு வங்கத்தில் தேர்தல் பரபரப்புரைகளில் ஈடுபட ஆரம்பித்து உள்ளனர். அவர்களுக்கு போட்டியாக, மம்மதா பேனர்ஜியும் பிரச்சாரங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகின்றார். அவர் பேசுகையில், பாஜக கட்சியினைப் போல பெரியத் திருடனே இல்லை எனவும், அக்கட்சியானது மக்களிடம் சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக உள்ளது எனவும் குற்றம் சாட்டி உள்ளார்.