பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றுக் கூறியதே இல்லை!

06 June 2020 அரசியல்
mamatabanerjee1231.jpg

நான் ஒரு போதும் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றுக் கூறியதே இல்லை என, மேற்கு வங்க முதல்வர் மம்மதா பேனர்ஜி கூறியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், கடந்து மூன்று மாதங்களாக ஒரு சிலர், பிரதமர் மோடி பதவியில் இருந்து நீங்க வேண்டும் கூறி வருகின்றனர். கொரோனா வைரஸ் விவகாரத்தினை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். இது அதற்கானத் தருணம் அல்ல. தொடர்ந்து, பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றுக் கூறுகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என்று ஒரு நாளும் நான் கூறியதில்லை.

தற்பொழுது மேற்கு வங்கத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, சேதாரம் ஏற்பட்டு உள்ளது. இதனால், கடுமையான பாதிப்புகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். தொடர்ந்து, ஆம்பன் புயல் மற்றும் கொரோனா வைரஸால் மேற்கு வங்கத்தில் கடுமையானப் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றது. ஐந்து லட்சம் குடும்பத்தினர் தங்களுடைய வீடுகளை இழந்துள்ளனர். 25 லட்சம் விவசாயிகள், கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பாஜகவின் குற்றச்ச்சாட்டுக்களை மறுத்து பேசும் வகையில், இந்த பேச்சு உள்ளதாகவும், மறைமுகமாக மோடிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் பல அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

HOT NEWS