மோடியை சந்தித்தா மம்மதா! மேற்கு வங்கத்தின் பெயரை மாற்றக் கோரிக்கை!

19 September 2019 அரசியல்
mamatameetsmodi.jpg

நேற்று மேற்கு வங்க முதல்வர் செல்வி. மம்மதா பேனர்ஜி, பாரதப் பிரதமர் திரு மோடி அவர்களை சந்தித்துத் தன்னுடையப் பிறந்தநாள் வாழ்த்துக்களையும், அன்பையும் கூறினார். மேலும் அவருக்கு, பூங்கொத்து, குர்தா எனும் உடை மற்றும் ரசகுல்லா எனும் உணவினையும் அன்பாக அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேனர்ஜி, மேற்கு வங்கத்தில், உலகிலேயே இரண்டாவது பெரிய நிலக்கரி சுரங்கத்தைத் தொடங்கி வைக்க வேண்டும் என, வரவேற்றன் என்றார். மேலும், மேற்கு வங்கம் என்றப் பெயரினை பங்களா என மாற்றவும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார். சாரதா சிட் பண்ட் ஊழல் பற்றி, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதுபற்றி எல்லாம் நான் பிரதமரிடம் பேசவில்லை எனக் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியும், மம்மதா பேனர்ஜியும் அரசியலில் எதிரெதிர் துருவங்கள் என்பதை இந்திய நாடே அறியும். மோடியின் பதவியேற்பு விழா உட்பட பல நிகழ்ச்சிகளில், மம்மதா பேனர்ஜி பங்கேற்கவில்லை. இந்நிலையில், இந்த சந்திப்பு அனைவருக்குமே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சாரதா சிட்பண்ட் ஊழல் விவகாரத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் மேற்கு வங்க காவல்துறையின் ஆணையரான ராஜீவ் குமாரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், மம்மதா பேனர்ஜி பிரதமரை சந்தித்துள்ளார் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

HOT NEWS