நடிகை மஞ்சு வாரியர், பிரபல மலையாள இயக்குநர் மீது புகார் கொடுத்துள்ளார். அதற்கு அந்த இயக்குநர் பதில் கொடுத்துள்ளார்.
அசுரன் படத்தில் நடித்ததன் மூலம், தமிழ் சினிமா ரசிகர்களிடையே, பிரபலமடைந்துள்ளார் அப்படத்தின் நாயகி மஞ்சு வாரியார். அவர், மலையாள நடிகர் திலீப் குமாரின் முன்னாள் மனைவி ஆவார். அவர், தற்பொழுது, மலையாள இயக்குநர் ஸ்ரீகுமார் மீது பரபரப்புக் குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளார்.
காவல்துறையிடம் அளித்துள்ள புகாரில், ஸ்ரீகுமார் தொழில்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், எனக்கு மன உளைச்சலையும், மனக் கஷ்டத்தையும் ஏற்பட்டு வருகிறார். மேலும், என்னைப் பற்றிப் பேசும் பொழுது தகாத வார்த்தைகளால் என்னைக் கஷ்டப்படுகிறார். என்னுடையப் பெயரை துஷ்ப்ரயோகம் செய்கின்றார் எனக் கூறியுள்ளார்.
இதற்குத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிலளித்துள்ள, ஸ்ரீ குமார், நான் காவல்துறையின் அனைத்து விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க உள்ளேன். என் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதை, செய்திகளைப் பார்த்தே தெரிந்து கொண்டேன்.
மேலும் அவருடையப் பதிவில், மஞ்சு வாரியர் என்னிடம் முதன் முதலில் பேசும் பொழுது, வீட்டை விட்டு வந்துள்ளேன் தற்பொழுது என்னிடம் 1500 ரூபாய் மட்டுமே உள்ளது என்று அழுதார். நான் தான் விளம்பரத்தில் நடிக்க 25 லட்ச ரூபாயை வழங்கி வாழ்க்கை கொடுத்தேன் இதை அவர் மறுக்க மாட்டார் எனவும் பதிவிட்டுள்ளார்.