விரைவில் மங்காத்தா-2! எல்லாம் தயார்!

15 October 2019 சினிமா
mankatha.jpg

தல அஜித் குமார் தற்பொழுது, தல 60 படத்தில் நடிப்பதற்கு ஆயத்தமாகி வருகிறார். அப்படத்தினை, நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளார். இவரே, நேர்கொண்ட பார்வைப் படத்தினையும் தயாரித்தார். நேர்கொண்ட பார்வைப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, தல 60 படத்தினையும், தயாரிக்க உள்ளார்.

நடிகை ஸ்ரீதேவிக்குக் கொடுத்த வாக்கினைக் காக்கும் பொருட்டு, இரண்டு படங்களை தான் நடித்துத் தருகின்றார். இரண்டாவது படம், வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது. இதனை இயக்குநர் ஹெச். வினோத்தே மீண்டும் இயக்க உள்ளார். படத்தின் வேலைகள் மற்றும் பணியாட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்புத் துவங்குவதற்கு, வாய்ப்புகள் உள்ளன.

இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் அஜித்திடம் மங்காத்தா-2 திரைப்படம் குறித்து, கதை கூறியதாகவும், அதனை அஜித் குமார் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. இதனையும், தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிக்க உள்ளார் எனும் தகவலும் வெளியாகி உள்ளது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகவில்லை.

HOT NEWS