இந்தியா பொருளாதாரம் ஆழமான கவலைத் தருகின்றது! மன்மோகன் சிங்!

19 November 2019 அரசியல்
manmohansinghlatest.jpg

மக்களிடம் நிலவும் பொருளாதாரம் மீதான நீடித்த அவநம்பிக்கையும், அச்சமும், இந்த நீடித்த பொருளாதார மந்தநிலைக்குக் காரணம் என தெரிவித்து உள்ளார்.

கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, பொருளாதார தேக்கம் மற்றும் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. இந்தியாவின் ஜிடிபி கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. மேலும், இது போல குறைந்து கொண்டே இருக்கும் விஷயங்கள் அதிகமாகி வருகின்றன.

இந்தப் புள்ளி விவரங்களால், பொருளாதார நிலை கவலைத் தருகின்றது என நான் கூறவில்லை. இவை அனைத்தும் நாட்டிலுள்ள, பொருளாதார சிக்கலின் வெளிப்பாடுகளே இவை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் எழுதியுள்ள மன்மோகன் சிங், மக்களிடம் பொருளாதாரம் குறித்து அவ நம்பிக்கையும் அச்சமும் நிலவி வருகின்றது. இது, மேலும், பொருளாதாரத்தினை பாதிக்கும் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS