சீனாவை ஓரங்கட்ட இறங்கும் உலக நாடுகள்! பல நாடுகள் முன்னிலை!

08 June 2020 அரசியல்
chinaflag.jpg

சீனாவின் செயல்களை முற்றிலுமாக் கட்டுப்படுத்துவதற்காக தற்பொழுது அமெரிக்காவினைத் தொடர்ந்து பல நாடுகள் களமிறங்கி உள்ளன.

சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது, உலகம் முழுக்கத் தன்னுடையக் கோரத் தாண்டவத்தினை ஆடி வருகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தப் பிரச்சனைக்கு முழுக்க முழுக்க சீனா தான் காரணம் என, அமெரிக்காத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது. ஜெர்மனி தங்கள் நாட்டில் ஏற்பட்ட பண நஷ்டத்திற்கு, சீனாவே காரணம் எனவும், அதற்கு நஷ்ட ஈடுத்தர வேண்டும் எனவும் கூறி வருகின்றது.

இந்நிலையில், கூடுதலாக பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஸ்வீடன், நார்வே உள்ளிட்ட நாடுகள் தற்பொழுது சீனாவின் அனைத்து செயல்களையும் முடக்க முடிவு செய்துள்ளன. தொடர்ந்து, கொரோனா விவகாரத்தில் உண்மையைக் கூறாமல் இருப்பதாகவும், பல விஷயங்களை மறைக்கின்றது எனவும் சீனாவினைக் குறைக் கூறியுள்ளன.

HOT NEWS