மார்ச் 31ம் தேதி கடைசிநாள்! ஆதாருடன் இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது!

15 February 2020 அரசியல்
pancard.jpg

வருகின்ற மார்ச் மாதம் 31ம் தேதிக்குள், ஆதார் அடையாள அட்டையுடன் பான் கார்டினை இணைக்காவிட்டால், பான் கார்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் மொத்தமாக, 49 கோடி பேருக்கு பான் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் மூலம், ஒவ்வொருவரின் வருமானத்தினையும் எளிதாக கணிக்க இயலும். இதனை, வருமான வரித்துறையானது கையாண்டு வருகின்றது. இதனைத் தற்பொழுது ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தி வருகின்றது.

ஏற்கனவேப் பலமுறை அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது கடைசி காலக்கெடுவினையும் அறிவித்துள்ளது வருமான வரித்துறை. அதன்படி, வருகின்ற மார்ச் 31ம் தேதி தான் கடைசி நாளாகும். அதற்குள், பான் கார்டு வைத்திருப்பவர்கள், தங்களுடைய பான் கார்டினை மத்திய அரசின் ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என அறிவித்துள்ளது. அவ்வாறு இணைக்காத அட்டைகளைப் பயன்படுத்த இயாலாது எனவும் கூறியுள்ளது.

ஒருவேளை, மார்ச் 31ம் தேதிக்குப் பின் இணைத்தால், மீண்டும் பான் கார்டினைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர் எனவும் வருமானவரித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே, 18 கோடிக்கும் அதிகமான பான்கார்டுகள் இணைக்கப்பட்டுள்ள இந்நிலையில், இன்னும் 31 பான் கார்டுகள் இணைக்கப்பட வேண்டி உள்ளது என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

HOT NEWS