உலகின் மிக ஆழமான இடமாக கணிக்கப்பட்டுள்ள, மரியான டிரெண்ச் எனப்படும் பகுதியில், பிளாஸ்டிக் பையை கண்டுபிடித்துள்ளனர். கடலில் மிக ஆழமான பகுதியாக கருதப்படும், மனியான டிரெண்ச் பகுதியில் அமெரிக்க நீச்சல் வீரர்களும், விஞ்ஞானிகளும் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதில், கிட்டத்தட்ட 10,927 மீட்டர் ஆழம் வரை சென்று ஆராய்ச்சி செய்தனர்.
இதுவே, உலகின் மிக ஆழமான ஆராய்ச்சி ஆகும். பசிபிக் கடல் பகுதியில் உள்ள இந்த மரியான டிரெண்ச்சில், நான்கு மணி நேரம் இருந்த அந்த ஆராய்ச்சியாளர், கடலடியில் வாழும் உயிரினங்களைப் பார்த்துள்ளார். அவைகளை மட்டுமின்றி, பிளாஸ்டிக் கவர்கள், மிட்டாய் கவர்கள் என பல குப்பைகளைப் பார்த்து அதிர்ந்துள்ளார். இந்தப் பகுதியில் முதன் முதலாக 1960ம் ஆண்டு, ஆராய்ச்சி செய்தனர்.
ஆனால், இவ்வளவு ஆழாமான ஆராய்ச்சியை உலகில் இதுவரை யாரும், எந்தப் பகுதியில் செய்யவில்லை. உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், இத்தகைய செய்திகள் விஞ்ஞானிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.