ஆன்லைனில் கல்யாணம் செய்த ஜோடி!

07 April 2020 அரசியல்
indianbridal.jpg

தற்பொழுது இந்தியா முழுவதும், ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது நீட்டிக்கப்படலாம் என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

இந்நிலையில், சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர், ஆன்லைன் மூலமாக திருமணம் செய்துள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது. மும்பையைச் சேர்ந்த மெர்ச்சன்ட் நேவி ஆபிசரான பிரீத் சிங் என்பவர், டெல்லியினைச் சேர்ந்த நீத் கௌவுர் என்றப் பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.

ஏப்ரல் 4ம் தேதி அன்று இவர்களுடையத் திருமணமானது, முறைப்படி நடைபெற்றது. இந்தத் திருமணத்திற்கு யாரும் முறைப்படி அழைக்கப்படவில்லை. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், ஆன்லைனிலேயே திருமணம் செய்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக ஆன்லைனில் பழகி வந்த அவர்கள், குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதுகுறித்து ப்ரீத் சிங் கூறுகையில், நாங்கள் திருமணம் செய்து கொள்வதாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டு விட்டது. ஏப்ரல் நான்காம் தேதி அன்று, திருமணம் செய்யத் திட்டமிட்டு இருந்தோம். அதற்கு முன்னாள், பேச்சிலர் பார்ட்டி, மெஹந்தி உள்ளிட்ட விஷயங்களை பின்பற்றலாம் என நினைத்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக, ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால், பேச்சிலர் பார்ட்டி மற்றும் மெஹந்தி உள்ளிட்டவை நடைபெறவில்லை. திருமணம் முடிந்ததும் இலங்கைக்கு தேனிலவு செல்ல திட்டமிட்டு இருந்தோம். ஆனால், தற்பொழுது அதனையும் தள்ளிப்போட்டு உள்ளோம். 150 பேரையாவது அழைக்கலாம் என்ற நிலையில், வெறும் 50 பேர் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ஆன்லைனில் வந்து, எங்களை வாழ்த்தினர் எனத் தெரிவித்தார்.

HOT NEWS