மார்வெல் பேஸ் 4 திரைப்படங்கள் வெளியாக உள்ளன! மார்வெல் அறிவிப்பு!

22 July 2019 சினிமா
thorloveandthunder.jpg

உலகப் புகழ் பெற்ற மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம், தன்னுடைய அடுத்த பிராஜெக்ட் பற்றியத் தகவலை அறிவித்துள்ளது. அதன் படி, பேஸ் 4 எனும் தலைப்பில், மார்வெல் கதாப்பாத்திரங்களின் நான்காம் பாகங்கள் வெளியாக உள்ளன.

2020ம் ஆண்டு மே 1ம் தேதி, பிளாக் விடோ திரைப்படம் உலகளவில் வெளியாக உள்ளது. இப்படத்தினை கேட்டி ஸ்ஸார்ட் லேண்ட் இயக்கி வருகிறார். இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

pic courtesty: MarveL

2020ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி, தி ஈடர்னல்ஸ் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தினை க்ளோ சாஓ இயக்கி வருகிறார்.

ஷாங் சீ அண்ட் தீ லிஜிண்ட் ஆஃப் தீ டென் ரிங்ஸ் எனும் திரைப்படம், 2021ம் ஆண்டு 12ம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தினை, டெஸ்டின் டேனியல் இயக்கி வருகிறார்.

2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி, டாக்டர் ஸ்ட்ரேஜ் திரைப்படத்தின் அடுத்தப் பாகமான, டாக்டர் ஸ்ட்ரேஜ் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தினை, ஸ்காட் டெர்ரிக்சன் இயக்க உள்ளார். இத்திரைப்படம் தற்பொழுது, திரைக்கதை எழுதும் நிலையில் உள்ளது.

2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி, தோர் பட வரிசையில் வெளியாகும் நான்காவது பாகமான, தோர் லவ் அண்ட் தண்டர் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தினை, டைகா வைத்தீதீ எழுதி இயக்க உள்ளார்.

மேலும் டிஸ்னி தொடர்களாக, தி பால்கான் அன்ட் தி விண்டர் சோல்ஜர், வாண்டா விஷன், லோகி, ஹாவ்க் ஐ, பிளேட் போன்ற டிவி தொடர்களும் ஒளிப்பரப்பாக உள்ளன.

இதுவே மார்வெல் நிறுவனத்தின் பேஸ்4 ப்ராஜெக்ட் ஆகும். இத்திரைப்படங்களைப் பற்றியத் தகவல்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் தற்பொழுது சர்வதேச அளவில், சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.கள் வெளியான நிலையில், ரசிகர்கள் தற்பொழுது சர்வதேச அளவில், சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

HOT NEWS