மார்வெல்லில் மீண்டும் ஸ்பைடர் மேன்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

30 September 2019 சினிமா
spiderman6.jpg

மார்வெல் தயாரிப்பில் மீண்டும் ஸ்பைடர் மேன் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனால், ஸ்பைடர் மேன் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

கடந்த மாதம், இனி ஸ்பைடர் மேன் திரைப்படம் மார்வெல் தயாரிப்பில் வெளியாகாது என, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், இதனை மீண்டும் சோனி பிக்சர்ஸ் நிறுவனமே, தயாரித்து வெளியிடும் எனவும் கூறப்பட்டது.

டிஸ்னியின் கிளை நிறுவனங்களான, சோனி மற்றும் மார்வெல் நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்ட, வர்த்தகப் பிரச்சனையின் காரணமாக, இனி சோனி நிறுவனமே ஸ்பைடர்மேன் திரைப்படத்தினை தயாரிக்கும் என கூறியது. இதனால், ஸ்பைடர் மேன் ரசிகர்கள் #SaveSpiderMan என்ற ஹேஸ்டேக்கில், சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில், மார்வெல் நிறுவனத்தின் இயக்குநரான கெவின் பீஜ், நான் ஸ்பைடர் மேன் திரைப்படம் மார்வெல்லில் வெளியாகும் என்ற செய்தியைக் கூறுவதில், மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த செய்தியினால், மார்வெல் நிறுவன ஊழியர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

சோனி நிறுவனத்துடன் நிலவி வந்த கருத்து மோதல் நீங்கிய நிலையில், வர்த்தக ரீதியிலும் நல்லுறவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மார்வெல் நிறுவனம் இந்த ஸ்பைடர் மேன் திரைப்படத்தைத் தயாரிக்க உள்ளது. ஸ்பைடர் மேன் மிகப் பெரிய ஹீரோ ஆவார். அவருக்கென கோடிக் கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளார். ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் அடுத்த பாகம், வரும் ஜூலை 2021ல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS