ரஜினியினை முந்திய விஜய்! தென் இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்பு!

13 January 2021 சினிமா
master12.jpg

இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில், விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு தென் இந்திய மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் உள்ள அனைத்துத் திரையறங்குகளும் மூடப்பட்டன. அதுமட்டுமின்றி, உலக நாடுகள் பலவும் திரையறங்குகளை மூடியதால் திரைப்படத் துறையானது கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த சூழலில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய மாஸ்டர் திரைப்படமானது, கடந்த தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கொரோனா ஊரடங்கின் காரணமாக திரையறங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால், எந்தப் புதுப்படமும் திரையறங்கிற்கு வரவில்லை. இதனால், விஜயின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த சூழலில், நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியினைச் சந்தித்து திரையறங்குகளை முழுமையாக திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து திரையறங்குகளை 100% திறப்பதற்கு, அவரும் அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டார். இருப்பினும், நீதிமன்றம் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியது. இருப்பினும், பெரும்பாலான திரையறங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகின்றது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டிற்கும் மேலாக திரையறங்கிற்குச் செல்லாதவர்கள், தற்பொழுது திரையறங்குகளில் குவிந்து வருகின்றனர். தமிழில் ரஜினிகாந்தின் படத்திற்கு கிடைப்பதை விட, இந்த முறை பல மடங்குக் கூட்டமானது திரையறங்குகளில் குவிந்து உள்ளது.

விஜயின் மாஸ்டர் திரைப்படமானது, தமிழகத்தின் 99% திரையறங்குகளில் வெளியாகி உள்ளது. அத்துடன், கேரளாவின் பெரும்பாலான திரையறங்குகள், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெரும்பாலான திரையறங்குகளில் வெளியாகி உள்ளது. இவ்வளவு திரையறங்குகளில் விஜயின் படம் வெளியாவது இதுவே முதல் முறை. அத்துடன் தமிழ் சினிமாவின் 21வது நூற்றாண்டில் இவ்வளவு திரையறங்குகளில் ஒரே நடிகரின் படம் வெளியாவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS