மாஸ்டர் ஒரு ஆக்சன் படம்! லோகேஷ் கனகராஜ் பேட்டி!

27 April 2020 சினிமா
masterteaser.jpg

நடிகர் விஜய் இயகத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படமானது, ஏற்கனவே ரிலீஸாகி இருக்க வேண்டிய சூழ்நிலையில் தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, இநப் படத்தின் ரீலீஸானது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கின்றது. இது குறித்து, நேற்று லோகேஷ் கனகராஜ் வீடியோ பதிவு ஒன்றில் பேசினார்.

அதில், மாஸ்டர் திரைப்படம் ஒரு ஆக்சன் படமாகும். படம் ஆரம்பிக்கும் பொழுது, விஜய் சாரை, விஜய் சார் என்று அழைத்தேன். பின்னர், தற்பொழுது வரையிலும் அண்ணன் என்று தான் அழைக்கின்றேன் என்றுக் கூறினார். இந்தப் படம், முற்றிலும் வித்தியாசமான திரைப்படம் எனவும், இந்தப் படத்தின் கதையை அனைவருக்கும் பிடிக்கும் எனவும் கூறினார்.

படம் எப்பொழுது வெளியாகும் என்றுக் கேட்கின்றீர்கள். இப்பொழுது ஊரடங்கு அமலில் உள்ளது. அது முடிந்த பின்னர் தான், ரிலீஸ் பற்றி பேச முடியும். ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், இது குறித்து விவாதிக்கப்படும். படத்தின் பத்து நாள் புரொடக்சன் வேலைகள் உள்ளன. பட ரிலீஸ் தேதியும், டீசரும் ஒரே நேரத்தில் அறிவிக்கப்படும். தற்பொழுது, பொதுமக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்றுக் கூறினார்.

HOT NEWS