மாஸ்டர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு! பாடல் வெளியீடு குறித்த முக்கிய தகவல்!

04 March 2020 சினிமா
master1stlook.jpg

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் வெளியாகும் தேதியானது தற்பொழுது உறுதியாகி உள்ளது.

நயன்தாரா, சாந்தனு, உள்ளிட்ட பலப் பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். மாளவிகா மோகனன் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆன்ட்ரியா மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் முக்கிய பிரபலங்களாக இந்தப் படத்தில் பார்க்கப்படுகின்றனர். படத்தின், சூட்டிங் முடிந்து விட்ட நிலையில், படத்தின் மற்ற போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்பொழுது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்திற்கு, ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். அவர் இசையில், விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் தற்பொழுது வைரலாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டானது, சென்னையில் உள்ள லீலா பேலஸ் எனும் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது.

கடந்த சர்கார் மற்றும் பிகில் படங்களின் பாடல்களானது, தனியார் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதற்கு, அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், சென்னை மற்றும் கோவையில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் கல்லூரிகளில் நடத்தப்படலாம் என கூறப்பட்டது. தற்பொழுது, தேவையற்றப் பிரச்சனைகள் வரக் கூடாது என்பதற்காக, தனியார் விடுதியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் முக்கியப் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS