நடிகர் விஜய் நடிப்பில், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படமானது, வருகின்ற ஏப்ரல் ஒன்பதாம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த வாரம், இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகின. இதனிடையே, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகின்ற காரணத்தினால், தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையறங்குகளும் மூடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தத் தேதியில் மாஸ்டர் திரைபடம் வெளியாகுமா என்றக் கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து, படக்குழுவினர் அதிரடி தகவலை வெளியிட்டுள்ளனர். அதில், இந்தப் படமானது திட்டமிட்டப்படி வெளியாகும் எனவும், அதற்குள் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பானது, சரியாகும் எனவும் கூறியுள்ளனர்.
இந்த அறிவிப்பினால், நடிகர் விஜயின் ரசிகர்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்துள்ளனர். இதனை, தற்பொழுது சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.