விரைவில் மாஸ்டர் டீசர்! தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்! கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

05 October 2020 சினிமா
master3rdlook.jpg

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டீசரானது, விரைவில் வெளியாகு என அப்படத்தின் தயாரிப்பாளர் சேவிய் பிரிட்டோ தெரிவித்து உள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்தப் படம் ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டி இருந்தது. இந்தப் படத்தின் பாடல்கள், ஏற்கனவே வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகின்றன. இருப்பினும், ஊரடங்கின் காரணமாக திரையறங்குகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. எப்பொழுது இந்தப் படம் வெளியாகும் என, பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்த மாதம், 50% இருக்கைகளுடன் திரையறங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், விரைவில் தமிழகத்தில் உள்ள திரையறங்குகள் திறக்கப்படுவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன. வருகின்ற தீபாவளி அன்று மாஸ்டர் திரைப்படத்தினை வெளியிடுவதற்கான ஆயத்தப் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இந்தப் படத்தினைத் தயாரித்து உள்ள சேவியர் பிரிட்டோ இப்படம் குறித்து புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.

அதன்படி, விரைவில் மாஸ்டர் திரைப்படத்தின் டீசரானது வெளியாகும் என டீவீட் செய்துள்ளார். இது தற்பொழுது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. படம் வெளியாகி இருந்தால், எப்படியும் 6 மாதம் ஆகியிருக்கும் என்ற நிலையில், இவ்வளவு நாட்கள் கழித்து, படத்தின் டீசர் வெளியாக இருப்பதை, இப்பொழுதே சமூக வலைதளங்களில் விஜயின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

HOT NEWS