வருகின்ற புத்தாண்டு அன்று மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் வெளியாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படமானது, கடந்த ஏப்ரல் மாதமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், எதிர்பாராத விதமாக, கொரோனா வைரஸ் ஊரடங்கானது அறிவிக்கப்பட்டதால், இந்தப் படத்தின் ரிலீசானது தள்ளி வைக்கப்பட்டது. இந்தப் படம் எப்பொழுது வெளியாகும் என, அனைவரும் காத்திருந்தனர். அவர்களுக்கு விருந்தாக, அப்படத்தின் டீசரானது இணையத்தில் வெளியிடப்பட்டது.
அந்த டீசரும் பல சாதனைகளைப் புரிந்து விட்டது. தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், திரையறங்கிற்குச் செல்லும் நபர்களின் எண்ணிக்கையானது, சொற்ப அளவில் இருந்ததால், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியினை ஜனவரி 13, 2021 அன்று தள்ளி வைத்து உள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் சென்சார் பணிகளும் முடிந்து, இந்தப் படத்திற்கு யூஏ சான்றிதழும் வழங்கப்பட்டு உள்ளது. இதனால், படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது.
ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாகவும், படத்தின் ப்ரோமோஷனாகவும் மாஸ்டர் படத்தின் ட்ரெய்லரானது, வருகின்ற புத்தாண்டு அன்று சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக வெளியாகும் வாய்ப்புகள் இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை, விஜய் ரசிகர்கர் தற்பொழுது கொண்டாடி வருகின்றனர்.