ஏப்ரல் 9ம் தேதி மாஸ்டர் வெளியாகும்! சூட்டிங் நிறைவடைந்தது!

01 March 2020 சினிமா
mastershootingend.jpg

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.

இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் சூட்டிங்கின் பொழுது, திடீரென்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதனால், இரண்டு நாட்கள் சூட்டிங் தடைபட்டது. இதனிடையே, இந்தப் படத்தின் சூட்டிங் தற்பொழுது முடிவடைந்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. சூட்டிங் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, படத்தின் டப்பிங் பணிகள் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகவும், விரைவில் படத்தின் பாடல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால், இந்த்த் திரைப்படம் ஏற்கனவே அறிவித்தப்படி, வருகின்ற ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படம், கொரிய படத்தின் ரீமேக்காக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS