தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டமானது, இன்று துவக்கி வைக்கப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயிலாடுதுறையினை, தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இந்த சூழலில், கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில், மயிலாடுதுறையினை தனி மாவட்டமாக மாற்றுவதாக, தமிழக அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் பல மாவட்டங்கள் தனியாக உருவாக்கப்பட்டு வந்தன.
இந்த சூழலில், இன்று மயிலாடுதுறையினை தனி மாவட்டமாக பிரித்து உள்ளனர். இதற்கான அரசாணையினை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சியினை காணொலி வாயிலாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.