எம்சிஏ படிப்பின் கால அளவு குறைப்பு! இனி 2 வருடம் தான்!

06 July 2020 அரசியல்
aicte.jpg

எம்சிஏ படிப்பின் கால அளவானது மூன்று ஆண்டுகளில் இருந்து, 2 வருடமாகத் தற்பொழுது குறைக்கப்பட்டு உள்ளது.

அனைத்து உயர்நிலை படிப்புகளும் பொதுவாக இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில், மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மட்டும் மூன்று ஆண்டுகள் இருந்து வந்தது. இதனால், மாணவர்களின் வயதும், உழைப்பும் வீணாவதாக தொடர்ந்துப் புகார்கள் எழுந்து வந்தன. இது குறித்து, தற்பொழுது ஏஐசிடிஇ அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வருகின்ற 2020-2021ம் கல்வியாண்டு முதல், எம்சிஏ படிப்பானது மூன்று ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு உள்ளது. மேலும், அதற்கேற்றாற் போல, பாடத் திட்டமும் மாற்றியமைப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், தற்பொழுது 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்களும், எம்சிஏ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HOT NEWS