கொரோனா வைரஸ் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது!

18 March 2020 அரசியல்
coronavirus121.jpg

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய்க்கு, மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து, உலகம் முழுக்க வேகமாகப் பரவி வரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸானது, தற்பொழுது வரை 195,000 பேரிடம் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவில் 137 பேரிடம் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

80,000 பேர் சிகிச்சைப் பெற்று நலமடைந்து வீடு திரும்பினர். 7981 பேர் மரணமடைந்துள்ளனர். சீனாவில் தான், இதன் பாதிப்பு அதிகமாகும் என்றால், ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில், இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நோய்க்கு அமெரிக்காவில் 50 பேர் மரணமடைந்துள்ளனர். இதனையடுத்து, தற்பொழுது அங்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியானது முடிக்கி விடப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் சியாட்டல் நகரில் அமைந்துள்ள கெய்சர் பெர்மனன்ட்டீ வாசிங்டண் ஹெல்த் ரிசர்ச் இன்ஸ்ட்டிட்யூட் (KPWHRI) என்ற ஆய்வகத்தில், தற்பொழுது சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. அங்கு உருவாக்கப்பட்டுள்ள மருந்தினை, தன்னார்வலர் ஒருவர் மீது சோதனை செய்துள்ளனர். பொதுவாக, எலிகள் மீது தான் முதலில் இந்த மருந்துகள் பயன்படுத்தப்படும். ஆனால், போதிய நேரமின்மை காரணமாக, மனிதர்கள் மீது நேரடியாகப் பயன்படுத்தி உள்ளனர்.

சோதனைக்காக வந்த மனிதரின் உடலில், நல்ல எதிர்ப்பு சக்தி இருந்ததைத் தொடர்ந்து, அவருக்கு இந்த கொரோனா வைரஸ் மருத்துவ சோதனையானது செய்யப்பட்டது. பின் அவருடைய உடலில், இந்த வைரஸ் செலுத்தப்பட்டு அவருக்கு கொரோனா வைரஸ் பரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தும் வழங்கப்பட்டது.

அந்த மருந்தானது, அந்த நபரின் உடலில் செலுத்தப்பட்டு சோதனை நடைபெற்று வருகின்றது. இது குறித்து பேசியுள்ள என்ஏஐடி (The National Institute of Allergy and Infectious Diseases (NIAID)) இயக்குநர் டாக்டர்.ஆண்டனி கூறுகையில், பொதுவாக தடுப்பு மருந்துகளானது 12 முதல் 18 மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்டு, புழக்கத்திற்கு வரும். மூன்று கட்டங்களாக இந்த பரிசோதனையானது நடைபெற உள்ளது. இதற்கு ஆரோக்கியமான தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களிடம் சோதனை நடத்தப்பட உள்ளது.

இந்த சோதனை வெற்றி பெற்றால், பின்னர் பேஸ்2 மற்றும் பேஸ்3 என்ற முறைப்படி, இரண்டு மற்றும் மூன்றாவது கட்டமாக பரிசோதனை நடத்தப்படும். இதில், இரண்டாவது கட்டத்தில் 200 முதல் 2,000 பேரிடம் பரிசோதனை செய்யப்படும். மூன்றாவது கட்டத்தில் ஒரு பெரிய குழுவிடம் இந்தப் பரிசோதனை நடத்தப்படும். இதற்காக, ஆரோக்கியமான தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசோதிக்கப்பட்ட பின், பயன்படுத்தப்பட உள்ளனர்.

இதனால், விரைவில் இந்த கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS