10,000 கொடுத்தால் எப்ஐஆர் போடுவாங்க! மீரா மிதுன் பேட்டி!

04 November 2019 சினிமா
meeramithun1.jpg

நான் அரசியலுக்கு வருவேன் என, மாடலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான மீரா மிதுன் கூறியுள்ளார்.

அவர் செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது பேசியதில், எந்தவித விசாரணையும் இல்லாமல், ஒரே இரவில் என் மீது எப்ஐஆர் போட்டுள்ளனர். ஆனால், நான் அந்த எப்ஐஆர்களை முடித்துவிட்டேன். இருப்பினும், நான் எப்ஐஆர்ரை முடிக்க, முடிக்க, மீண்டும் மீண்டும் என் மீது எப்ஐஆர் போட்டுக் கொண்டே இருந்தனர்.

பொய் வழக்குகளை, சில பேர் கொடுக்கின்ற லஞ்சத்தை வாங்கிக்கொண்டு போட்டிருக்காங்க! ஒரு வேளை நான் அந்த போலீசுக்கு லஞ்சம் கொடுத்திருந்தா, என் மேல இருக்குற எப்ஐஆர்ர க்ளோஸ் பண்ணிட்டு, நான் யார் பேர சொல்றேனோ, அவங்க மேல போட்டிருப்பாங்க!

10,000 ரூபாய் கொடுத்து, உங்கள் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்றுக் கூறினால், கண்டிப்பாக எப்ஐஆர் போடும் நிலமையில் இன்று உள்ளது தமிழ்நாடு போலீஸ். மொத்தப் பேரும் பார்த்தா தான் நியாயம் கிடைக்கும். அதே மாதிரி, என்னுடைய கேஸ் பார்க்கும் பொழுது, எல்லாருக்கும் தெரியனும், நம்முடைய தமிழ்நாடு காவல்துறை எந்த மாதிரியான கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்று. அப்பொழுது தான் புரியும். இந்த சாதாரண விஷயமே, நியாயம் கிடைக்காதப்போ, பெரிய பெரிய கேஸ்லாம் போய்கிட்டு இருக்கு. அதனை எப்படி இவங்க டீல் பண்றாங்கன்னு ஒரு கேள்வி குறி இருக்கு.

ஒரு சில பேர் மீது வழக்குப் பதிவு செய்ய எப்ஐஆர் போடச் சொன்னால், அவர்கள் மீது எப்ஐஆர் போடவில்லை போலீஸ். நான் நடத்திய அழகிப் போட்டியின் பைனல்ஸின் பொழுது, இரண்டு போலீஸ்காரன் என் வீட்டிற்குள் வந்து உட்கார்ந்து கொண்டு, நீ இந்த ஷோவ நடத்தக் கூடாதுன்னு சொல்றான். நான் ஏன் நடத்தக் கூடாது, பேப்ர்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கு, நான் ஏன் நடத்தக் கூடாதுன்னா, நீ நடத்தக் கூடாதுன்னா நடத்தக் கூடாது இங்க இருந்து கிளம்புன்னு சொல்றான். அவன் கிட்ட நான் என்ன சொல்ல முடியும் அந்த போலீஸ்காரன்கிட்ட.

நான் என்னோட அடுத்த ஸ்டெப் என்ன என்பதை நீங்கள் கூடிய சீக்கிரம் பார்ப்பீங்க! ஹையர் அபிசியல் லெவல்ல இந்த விஷயத்தை எடுத்துட்டு வரப்போறேன். அதுல எனக்கு நியாயம் கிடைக்கும். இதுல இன்வால்வ் ஆன எல்லா போலீஸ் அதிகாரிகள், எனக்கு அநியாயம் இழைத்த அவர்கள் கண்டிப்பாக சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். அப்புறம் யார் யாருன்னு அவங்களுக்குத் தெரியும் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS