மேகதாது அணைக் கண்டிப்பாக கட்டப்படும்! கர்நாடகா முதல்வர் எடியூரப்பா உறுதி!

30 July 2019 அரசியல்
yeddyurappa.jpg

காவிரி நதியின் குறுக்கே, கண்டிப்பாக மேகதாது அணைக் கண்டிப்பாக கட்டப்படும் என கர்நாடக முதல்வர் திரு. எடியூரப்பா பேசியுள்ளார்.

இன்று கர்நாடாகவில் நிதி மசோதாவை தாக்கல் செய்து பேசுகையில், பெங்களூரு நீர்ப் பிரச்சனையைப் போக்க, காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கட்ட, மத்திய அரசிடம் அனுமதிக் கேட்டுள்ளதாகவும், மத்திய அரசு அனுமதி கொடுத்தவுடன், கண்டிப்பாக அணைக் கட்டப்படும் எனவும், இந்த முயற்சியில் இருந்து, கண்டிப்பாக நாம் பின்வாங்க மாட்டோம் எனவும் எடியூரப்பா கூறியுள்ளார். இது குறித்து, அனைத்துக் கட்சியினரிடமும் சேர்ந்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கப் போவதாகவும் கூறினார்.

HOT NEWS