உலகம் முழுவதும், கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், உலகளவில் போக்குவரத்து மட்டுமின்றி, வர்த்தகமும் வெகுவாகக் குறைந்துவிட்டது. மேலும், பல நாடுகள் தங்களுடைய நாடுகளுக்குள், வெளிநாட்டினர் வருவதற்குத் தடை விதித்து விட்டனர்.
இதற்கிடையே, தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு, பலவிதமான தடைகளையும், கட்டுப்பாடுகளையும் சவுதி அரேபியா விதித்துள்ளது. இதனால், தற்பொழுது, ஹஜ் பயணத்திற்கு செல்ல விரும்பியவர்கள் அனைவரும் பெரிய சிக்கலில் உள்ளனர். அங்கு உள்ள மெக்காவிற்கு செல்லப் பல நாடுகளுக்குத் தடையும், அதிகளவிலான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.
இதனால், மெக்காவில் உள்ள காபாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கையானது, சொற்ப அளவிற்குக் குறைந்துவிட்டது. இதன் காரணமாக, அந்தப் பகுதியானது வெறிச்சோடி காணப்படுகின்றது. அதுமட்டுமின்றி, அங்கு சுகாதாரப் பணியாளர்களும், மருத்துவக் குழுவினர்கள் மட்டுமே அதிகளவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.