நீண்ட காலத்திற்குப் பிறகு திறக்கப்பட்டது மேட்டூர் அணை! விவசாயிகள் மகிழ்ச்சி!

12 June 2020 அரசியல்
metturdam.jpg

நீண்ட காலத்திற்கு பிறகு, மேட்டூர் அணையானது, விவசாயத்திற்காக திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணைக்குச் சென்றார். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள நீர் தேக்கும் அணையானது, தமிழகத்தில் இருக்கின்ற அணைகளிலேயே மிகப் பெரிய அணையாகும். இந்த அணையின் உயரம் 120 அடியாக உள்ளது. இதில், 93.4 டிஎம்சி தண்ணீரினை தேக்கி வைக்க இயலும்.

கடந்த 12 வருடங்களாக விவசாயத்திற்காக இந்த அணையில் இருந்து, தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில், தற்பொழுது காவிரி டெல்டாப் பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இதனால், மேட்டூர் அணையில் நீர் நிரம்ப ஆரம்பித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, 101 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனை முன்னிட்டு, தற்பொழுது மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதனை காலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அவருடன் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டு அணையை திறந்து வைத்தனர்.

HOT NEWS