அமெரிக்கர்கள் உள்ளே வரக்கூடாது! மெக்சிகோ ரீவீட்டு! அலறும் அமெரிக்கா!

27 March 2020 அரசியல்
donaldtrumphandshake.jpg

உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்பொழுது 24,000 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த இந்த வைரஸானது, உலகின் அனைத்து நாடுகளிலும் கண்டறியப்பட்டு உள்ளது.

உலகம் முழுக்க சுமார் 5,00,000க்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்று இருப்பவர்களாக, கண்டறியப்பட்டு உள்ளது. சீனாவில் தற்பொழுது பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அங்கு இந்த வைரஸ் பரவும் வேகம் குறைந்துள்ளது. ஓரிருவர் மட்டுமே, இந்த வைரஸ் தொற்றின் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு ஏற்படும் மரணமும் மிகக் கணிசமாகக் குறைந்துள்ளது. சுமார், 3,500 பேர் வரை சீனாவில் இந்த நோயால் மரணமடைந்துள்ளனர்.

இந்த வைரஸால், சீனாவினைக் காட்டிலும் இத்தாலி தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. அங்கு தற்பொழுது வரை 8,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள அனைத்து இடங்களிலும், நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இந்த நாட்டினை பின்னுக்குத் தள்ளி, ஸ்பெயின் நாட்டில் ஒரே நாளில் 800க்கும் அதிகமானோர், இந்த வைரஸால் மரணமடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகின்றனர்.

சரி, இங்கு தான் இப்படி என்றால், உலகின் நம்பர் ஒன் வல்லரசு நாடான அமெரிக்காவிலோ இதன் நிலை வேறு. தற்பொழுது வரை அமெரிக்காவில் 85,000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில் தான், இந்த நோயால் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கையானது அதிகமாகி உள்ளது. இதனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த, மெக்சிகோ பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது.

மெக்சிகோவில் தற்பொழுது 457 பேர், இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தங்களுடைய அமெரிக்கா உடனான எல்லையினை, மெக்சிகோ அரசாங்கம் மூடியுள்ளது. மேலும், அமெரிக்காவிற்குச் செல்லத் தடையும், அமெரிக்கர்கள் மெக்சிகோ வரத் தடையும் விதிக்கப்பட்டு உள்ளன.

மெக்சிகோவில் இருந்து போதைப் பொருட்களை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் கடத்திக் கொண்டு வருகின்றனர் என, டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். இதனால், மெக்சிகோ எல்லைப் பகுதியில், தடுப்புச் சுவர் உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதனை, தற்பொழுது மெக்சிகோ நடத்திக் காட்டியுள்ளது.

சும்மாவா தமிழ் சினிமால சொன்னாங்க வாழ்க்கை ஒரு வட்டம்டா!

HOT NEWS