எம்ஐ 10 ஒரு விரிவான பார்வை! போன் எப்படி?

14 May 2020 தொழில்நுட்பம்
mi10.jpg

உலகம் முழுக்க தற்பொழுது அதிகம் பயன்படுத்தும் மொபைல் ப்ராடெக்டாக ஜியோமி நிறுவனம் வளர்ந்துள்ளது. அந்த அளவிற்கு, அதனை மக்கள் நம்புகின்றனர். அந்நிறுவனம், எம்ஐ 10 என்று புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

5ஜி தொழில்நுட்பத்துடன் விற்பனைக்கு வந்து இந்த போன், 6.67 இன்ச் அளவில் உள்ளது. ஆன்ட்ராய்டு 10 இயங்கு தளத்துடன் எம்ஐயூஐ 11 தொழில்நுட்பத்துடன் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பானது, இந்த போனின் திரைக்கு வழங்கப்படுகின்றது. சிங்கிள் சிம் அல்லது டூயள் சிம் வசதியுடனும், பார்ப்பவர் மனதைக் கொள்ளைக் கொள்ளும் விதத்தில் இது அமைந்துள்ளது.

சூப்பர் ஆமோஎல்ஈடி திரையுடன் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், 1080X2340 என்ற ஒளித்திறனுடன் கூடிய திரையை கொண்டுள்ளது. குவால்காம் எஸ்எம்8250 ஸ்நாப்டிராகன் சிப்செட்டுடன், ஆக்டோகோர் பிராசர் திறன் கொண்ட சிபியூவினை தன்னகத்தே பெற்றுள்ளது. இதில், அட்ரினோ 650 கிராபிக்ஸ் கார்டும் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால், எளிதாக பெரிய வீடியோ கேம்களை, எவ்வித பிரச்சனையும் இன்றி விளையாட இயலும்.

மெம்மரி கார்டுக்காக தனி வசதி கிடையாது. ஆனால், இதில், 128 ஜிபி ரோம் 8ஜிபி ரேம், 256ஜிபி ரோம் 8 ஜிபி ரேம், 256ஜிபி ரோம் 12 ஜிபி ராம் என்ற அளவில் பெரிய இன்டர்னல் மெமரி வசதி உள்ளது. தற்பொழுது விற்கப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும், பயனர்கள் அதிகம் எதிர்பார்க்கும் வசதிகள் என்றால் அது கேமிராவும், பேட்டரி லைப்புமே.

அந்த விஷயத்தில் இந்த ஸ்மார்ட்போன் தான் பெரியது. நான்கு கேமிராக்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. 108எம்பி, 13எம்பி, 2 எம்பி, 2எம்பி என பிரைமரி கேமிராவினையும், 20எம்பி செல்பி கேமிராவினையும் கொண்டுள்ளதால், தெளிவானப் புகைப்படத்தினை நம்மால் எடுக்க இயலும். 4780 எம்ஏஹெச் திறனுள்ள நான் ரிமூவல் பேட்டரியும், 30வாட்ஸ் பார்ஸ்ட் சார்ஜிங்கின் வசதியும் இதில் இணைக்கப்பட்டு உள்ளன. இதில், பார்ஸ்ட் வைர்லஸ் சார்ஜிங் வசதியும் உள்ளன.

HOT NEWS