மங்காத்தா படத்தில், ஒரு கண்டெய்னரை எடுத்து மற்றொரு கண்டெய்னரை வைத்து, லாவகமாக அந்த வாகன ஓட்டுநரை ஏமாற்றுவர். அது போல், தற்பொழுது ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளது.
ஆந்திர மாநிலம் நகரி பகுதியில், செல்போன்களை ஏற்றிக் கொண்டு சென்ற லாரியில் இருந்து, 12 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் திருடு போய் உள்ளன. சென்னையில் உள்ள எம்ஐ செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து, மும்பைக்கு செல்போன்களை ஏற்றிக் கொண்டு, கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.
ஆந்திராவின் நகரி பகுதியினை அப்பகுதி நெருங்கும் பொழுது, அப்பகுதியில் இருந்து ஒரு சிலர் வந்து அந்த லாரி ஓட்டுநரிடம் முகவரி கேட்பது போல் பேச்சுக் கொடுத்துள்ளனர். அதற்கு லாரி ஓட்டுநரும் பதிலளித்துள்ளார். அப்பொழுது, திடீரென்று கையில் இருந்த துப்பாக்கியினைக் காட்டி, அந்த கண்டெய்னர் லாரியினை சூரையாடியுள்ளனர்.
அந்த லாரியில் இருந்த 12 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை, அங்கிருந்து எடுத்துக் கொண்டு, அவர்கள் பயன்படுத்தி லாரிக்குள் வைத்துக் கொண்டு சென்றுவிட்டனர். இதனையடுத்து, நகரி போலீசில் அந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் புகார் கொடுத்ததை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.