MI7 படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்! பட்டைய கிளப்பும் டாம் க்ரூஸ்!

09 October 2020 சினிமா
missionimpossible.jpg

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடிப்பில், உலகளவில் பேசப்பட்டு வரும் திரைப்படமான MI7 படத்தின் சூட்டிங்கானது, தற்பொழுது நடைபெற்று வருகின்றது.

தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், அமெரிக்காவின் சினிமா தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், MI7 படத்தின் சூட்டிங் பணிகள் துவங்கி உள்ளன. டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி, உலகளவில் சக்கைப் போடு போட்ட படங்கள் தான் இந்த MI வரிசை படங்கள். பிரிட்டிஷ் உளவாளியாக MI படங்களில், டாம் க்ரூஸ் நடித்து வருகின்றார்.

இந்தப் படங்களின் ஏழாவது மற்றும் எட்டாவது பாகத்தினை பாராமௌண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தற்பொழுது தயாரித்து வருகின்றது. கடந்த பிப்ரவரி மாதம் தடைபட்ட சூட்டிங்கானது, தற்பொழுது ரோம் நகரில் படமாக்கப்பட்டு வருகின்றது. இந்தப் படத்திலும் தன்னுடைய ரசிகர்களுக்காக, கடினமான சண்டைக் காட்சிகளைத் தானே சுயமாக எவ்வித டூப்பும் இல்லாமல் நடித்து உருவாக்கி வருகின்றார் டாம் க்ரூஸ்.

HOT NEWS