pic courtesy:youtube.com/megan abbot
யூடிபில் உள்ள மேகன் அபாட் என்ற சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார் உலக நாயகி மியா கலிஃபா. அவர் தன்னுடைய ஆபாசப் படங்கள் மூலம் வெறும் 12,000 அமெரிக்க டாலர்கள், அதாவது 8.75 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பாதித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மியா கலிஃபாவை தெரியாத ஆண்கள் கிடையாது. அந்த அளவிற்கு அம்மணி உலக அளவில் பிரபலம். அவர் தற்பொழுது அளித்துள்ளப் பேட்டியானது, வைரலாகி வருகிறது. அவர் அளித்துள்ள பேட்டியில், நான் வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே, ஆபாசப் படங்களில் நடித்தேன். அதனால், வெறும் 12,000 டாலர்கள் பணம் மட்டுமே சம்பாதித்துள்ளேன்.
ஆனால், அவைகளில் இருந்து மீண்டு வருவதற்கு பல மாதங்கள் ஆகிவிட்டன. அவை என்னுடைய எதிர்காலத்தைப் பாதிக்காத வண்ணம் நான் நடந்து கொள்ள முயற்சிக்கிறேன். இருப்பினும், அவைகளில் இருந்து முழுமையாக என்னால் வெளி வர முடியவில்லை. அவைகளை ஏற்றுக் கொள்ளவும் முயற்சிக்கிறேன். அப்பொழுது தான், என்னுடைய எதிர்காலத்தை என்னால் காப்பாற்ற முடியும் என அவர் பேசியுள்ளார்.
பல இஸ்லாமிய அமைப்புகள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், ஆபாசப் படங்கள் துறையில் இருந்து வெளியேறிய மியா, தற்பொழுது மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறார்.