48 மெகா பிக்சல் கொண்ட எம்ஐ ஏ3 புதிய போன் அறிமுகமானது!

21 August 2019 தொழில்நுட்பம்
xiaomimi3.jpg

pic courtesy:xiaomi

எம்ஐ ஏ3 மாடல் குறித்தப் புதிய அறிவிப்பினை ஜியோமி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதே சமயம் ஒரு போட்டியினையும் உருவாக்கியுள்ளது. முதலில் இந்த ஸ்மார்ட் போனைப் பற்றிப் பார்ப்போம்.

எம்ஐ ஏ3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட் போன், 13,000 ரூபாய் மற்றும் 16,000 ரூபாய், ஆகிய விலைகளில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

48மெகா பிக்சல் கொண்ட, மூன்று ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கேமிராக்கள், இந்த புதிய ஸ்மார்ட்போனில் இடம் பெற்றுள்ளன. இது நம்முடைய முகத்தினை, மிகத் தெளிவாக புகைப்படம் எடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதே போல், 32 மெகா பிக்சல் திறன் கொண்ட ஏஐ செல்ஃபி கேமிரா, இந்த போனில் உள்ளது. இது நம்முடைய செல்ஃபியை தெளிவாகவும், அழகாகவும் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஏழாவது தலைமுறை உள்ளடக்க பிங்கர் பிரிண்ட் சென்சார், இந்த போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் இந்த போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 6 இன்ச் அளவுள்ள சூப்பர் ஆமோ எல்ஈடி திரை இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இதன் மூலம் நம்மால், எவ்வித படத்தையும், வீடியோ கேம்களையும் மிகத் தெளிவாகவும், கண் வலிக்காமலும் காண இயலும். இந்த ஸ்மார்ட் போனிலும், குவால்கம் ஸ்நாப்டிராகன் 665, 11என்எம் பிராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நம்மால் பெரிய செயலிகளை மிக எளிதாக எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல், பயன்படுத்த இயலும். ஹேங் ஆகும் வாய்ப்புகள் துளி அளவுக் கூட கிடையாது. இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனிற்கு நீடித்த பேட்டரி தேவை. எனவே, இந்த ஸ்மார்ட் போனிற்கு 4030 எம் ஏ ஹெச் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

4 ஜிபி ராம் 64 ஜிபி ரோம் உள்ள எம்ஐ ஏ3 12,999 ரூபாய்க்கும், 6 ஜிபி ராம், 128 ஜிபி ரோம் உள்ள எம்ஐ ஏ3 15,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வர உள்ளதாக, ஜியோமி நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், இந்த போன் பற்றியத் தகவலை டிவிட் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்படும் டிவீட் 665 ரீடிவிட் செய்யப்பட்டால், பொருள் ஒன்று பரிசாக வழங்கப்படும். 4000 ரீடிவிட்கள் செய்யப்பட்டு இருந்தால், ஜியோமியின் பொருள் ஒன்று பரிசாக வழங்கப்படும். 4800 ரீடிவிட்டுகள் செய்யப்பட்டு இருந்தால், ஒரு அழகிய ஜியோமி ஸ்மார்ட் போன் பரிசாக வழங்கப்படும் என ஒரு போட்டியையும் வைத்துள்ளது ஜியோமி நிறுவனம். என்னப் போட்டிக்குத் தயாரா?

HOT NEWS