மென் இன் பிளாக்-திரைவிமர்சனம்!

24 June 2019 சினிமா
mibreview.jpg

ரேட்டிங் 2.5/5

முந்தைய எம்ஐபி பட வரிசைக்கும், இந்தப் படத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்றால், அது ஏஜென்ட் எம் மட்டுமே. மற்றபடி, படத்தில் நடித்துள்ள அனைவருமே புது கதாப்பாத்திரங்கள். மற்றபடி, படத்தில் வரும் வாகனங்கள், கருவிகள், ஏலியன்கள் என அனைத்துமே அதே எம்ஐபி ஸ்டைல் தான்.

படத்தின் கதைக்கு வருவோம். மோலி என்ற கதாப்பாத்திரத்தில் டெஸ்ஸா தாம்சன் நடித்துள்ளார். அவர், குழந்தையாக இருக்கும் பொழுது, அவருடைய பெற்றோர், ஒரு ஏலியனைப் பார்க்கின்றனர். அதனை, எம்ஐபி ஏஜென்ட்டுகள் வந்து, அவர்களை மறக்கடிக்க செய்கின்றனர். இதனை தன் வீட்டில் உள்ள, ஜன்னல் வழியாகப் பார்க்கின்றார் மோலி.

பின், அந்த ஏஜென்ட்டுகளைப் போல ஆக வேண்டும் என ஆசைப்பட்டு, எம்ஐபியில் சேர நினைக்கிறார். ஒரு வழியாக சேரவும் செய்கிறார். அவர் அமெரிக்காவில் உள்ள எம்ஐபி கிளையில், மோலி வேலைக்கு சேர்கிறார். அவர் அங்கிருந்து, லண்டனில் உள்ள கிளைக்கு மாற்றப்படுகிறார்.

அங்கு நம்முடைய நாயகன் கிரிஸ் ஹேம்ஸ்வொர்த்தை சந்திக்கிறார். கிரிஸ்ன் கதாப்பாத்திரம் ஹெச். இவர்கள் இருவருக்கும் எம்ஐபி ஒரு வேலை தருகிறது. என்ன தெரியுமா? ஒரு ஏலியனுக்குப் பாதுகாப்பு அளிப்பது. அப்படி அந்த ஏலியனுக்கு காவலாளிகளாக இவர்கள் இருக்கும், பொழுது அந்த ஏலியன் கொல்லப்படுகிறது. இறப்பதற்கு முன் ஒரு கருவியை, அந்த ஏலியன் இவர்களிடம் தந்துவிடுகிறது. அந்தக் கருவியால் உலகையே அழிக்க முடியும் எனத் தெரிந்து கொண்ட கதாநாயகர்கள், எவ்வாறு அதனை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கின்றனர். எதிரிகளை வீழ்த்தினார்களா, இல்லையா என்பது தான் படத்தின் கதை.

ரொம்ப அழுகப் பழையக் கதையாக இருந்தாலும், நடித்துள்ள டெஸ்ஸா தாம்சன் மற்றும் கிரிஸ் ஹேம்ஸ்வொர்த் ஜோடியின் பிரஸ் காம்பினேஷனில் படமும் படு பிரஸ்ஸாக உள்ளது. அற்புதமான 3டி தொழில்நுட்பம், காமெடி, விசுவெல் எஃபெக்ட்ஸ் என சிறப்பாக இருந்தாலும், வில் ஸ்மித் இடத்தில், இவரை வைத்துப் பார்க்க முடியவில்லை. என்ன இருந்தாலும், பழைய எம்ஐபி, பழைய எம்ஐபி தான். சான்ஸே இல்ல!

HOT NEWS

அமெரிக்காவுக்கு ஆப்படித்த மோடி-இனி ரூபாயில் எண்ணெய் வாங்க முடிவு

அமெரிக்காவுக்கு ஆப்படித்த மோடி-இனி ரூபாயில் எண்ணெய் வாங்க முடிவு

24 May 2019 அரசியல்
modi1.jpg

ஈரானிடம், இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு, அமெரிக்கா கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தது. இதனை சற்றும் மதிக்காத இந்தியா ஈரானிடம் பெருமளவிலான கச்சா எண்ணெயை வாங்குவதற்கு ஒப்பந்தமிட்டது.

இதனால், இந்தியா மீதுப் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என, அமெரிக்க மிரட்டல் விடுக்கப்பட்ட போதிலும், வியாபாரத்தின் காரணமாக இன்று வரை பொருளாதாரத் தடை விதிக்கப்படவில்லை.

மேலும், தற்பொழுது புதிய தகவல் பரவி வருகிறது. அதன் படி, தற்பொழுது, இந்தியா ஈரானிடம், டாலரில் எண்ணெய் வாங்காமல் ரூபாயில் வாங்க உள்ளதாக, தகவல் பரவியுள்ளது. பாதி ரூபாயாகவும், மீதிப் பணத்திற்கு உற்பத்தி மற்றும் மூலப் பொருட்கள் மூலம் ஈரானிடம் எண்ணெய் வாங்க உள்ளது.

ஈரான் தற்பொழுது, குறைந்த விலைக்கு எண்ணெய் விற்கிறது. மேலும், ஈரானிடம் எண்ணெய் வாங்கி 60 நாட்களுக்குப் பின், பணம் தந்தால் போதும் என்ற காரணங்களுக்காக, இந்தியா தற்பொழுது ஈரானிடம் எண்ணெய் வாங்க உள்ளது.

HOT NEWS