மைக்ரோமேக்ஸ் ஐஎன் சீரிஸ் புதிய மாடல்கள்! மீண்டு வருமா மைக்ரோமேக்ஸ்?

09 November 2020 தொழில்நுட்பம்
micromaxin1.jpg

இந்தியாவின் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனம், தற்பொழுது இன் என்ற பெயரில் புதியதாக 2 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன்1 மற்றும் மைக்ரோமேக்ஸ் இன் 1 நோட் என்று புதியதாக பட்ஜெட் விலையில், இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 4ஜி தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ள இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஒரு சில வேற்றுமைகள் மட்டுமே உள்ளன. இரண்டு போன்களிலும் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இன்1 போனானது 720 x 1600 pixels என்ற அளவிலும், இன்1 நோட்டானது 1080 x 2400 pixels, என்ற அளவிலும் உருவாக்கப்பட்டு உள்ளது. இரண்டு போன்களிலும் ஆன்ட்ராய்டு 10 இயங்கு தளம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இன்1 போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி35, மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப் பொருத்தப்பட்டு உள்ளது. இரண்டு போனிலுமே ஆக்டோகோர் பிராஸசர் உள்ளதால், இதன் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இன்1 போனில் பவர்வீஆர் ஜிஈ8320 என்ற ஜிபியும், இன்1 நோட் போனில் மாலி ஜி52 எம்சி2 ஜிபியும் இணைக்கப்பட்டு உள்ளன. இரண்டு போனிலும் தனித் தனியாக, மெம்மரி கார்டு ஸ்லாட்கள் உள்ளன. இன்1 போனானது 32 ஜிபி ரோமுடன் 2ஜிபி ராமுடன், 64ஜிபி ரோமுடனும் 4 ஜிபி ராமுடன் வெளியாக உள்ளது.

அதே போல், இன்1 நோட் போனானது 64ஜிபி ரோமுடனும் 4ஜிபி ராமுடனும், 128 ஜிபி ரோம் மற்றும் 4 ஜிபி ராம் என்ற அளவில் வெளியாக உள்ளது. இன்1 போனில் 13எம்பி மற்றும் 2எம்பி என்ற அளவில் இரு கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. 8 எம்பி செல்ஃபி கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. அதே போல், இன்1 நோட் போனில் 48எம்பி, 5எம்பி, 2எம்பி, 2எம்பி என்ற அளவில் 4 கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. 16 எம்பி செல்பி கேமிராவானது என்1 நோட் போனில் பொருத்தப்பட்டு உள்ளது.

இரண்டு போனிலும், 5000எம்ஏஹெச் பேட்டரியானது இணைக்கப்பட்டு உள்ளது. இன்1 போனானது 6,999 ரூபாயிலும், இன்1 நோட்டானது, 10,999 என்ற விலையிலும் விற்பனைக்கு வர உள்ளது. இந்த போன் இந்த நவம்பர் மாதமே வெளியாக உள்ள நிலையில், இந்திய மக்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்பினைப் பெற்று உள்ளது.

HOT NEWS