இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட் போன்களுக்கு உள்ள மதிப்பு, உலகில் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. அந்த அளவிற்கு மக்கள், மிகக் குறைந்த விலையில், அதிக வசதிகளைக் கொண்ட பொருட்களை எதிர்ப்பார்க்கின்றனர்.
அதனை அறிந்த கொண்ட சீன நிறுவனங்கள், போட்டிப் போட்டுக் கொண்டு தங்களுடையப் பொருட்களை இந்தியாவில் விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. இதனால், இந்திய ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களான மைக்ரோ மேக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பெறும் நஷ்டத்தை சந்தித்தன. இதனால், அவர்களும் தற்பொழுது பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
மைக்ரோமேக்ஸ் என் 11 மற்றும் என் 12 என்ற மாடல்கள், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின், தலையெழுத்தை மாற்றும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
என் 11 மாடலில் 6.19 இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஹெச்டி டிஸ்ப்ளே ஆகும். 2ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் இதில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், மீடியா டெக்கினை இதில் பயன்படுத்தி உள்ளனர். இந்த ஸ்மார்ட் போனில் 2 ஜிபி ராம், 32 ஜிபி ரோம் மெமரி வசதி உள்ளது. அதே சமயம், நாம் மெமரி கார்ட்டினை இதில் பயன்படுத்தவும் முடியும். 128 ஜிபி எக்ஸ்பான்டபிள் மெமரி வசதி இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில், பிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது.
இதன் கேமிராவைப் பற்றி சற்றுப் பார்ப்போம். இதில் முதன்மைக் கேமிராவாக இரண்டு இணைக்கப்பட்டுள்ளன. ஒன்று 13 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் என, இதன் கேமிரா அட்டகாசமாக உள்ளது. அதே போல், இதன் செல்ஃபி கேமிரா 8 மெகா பிக்சல் திறன் கொண்டது. இந்த ஸ்மார்ட் போன், ஆண்ட்ராய்ட் 8.1 இயங்கு தளத்துடன் வெளிவருகின்றது.
4000எம்ஏஹெச் அளவுள்ள பேட்டரியைக் கொண்டுள்ள, பட்ஜெட் போன் என்றால் எப்படி இருக்கும் என்று நீங்களே யூகித்துப் பாருங்கள். 4ஜி ஸ்மார்ட்போனாக வெளியாகி உள்ள இந்த ஸ்மார்ட் போனின் விலை, 6,000 ரூபாய் ஆகும். பேடிஎம் மாலில் வாங்கும் பொழுது 6060 ரூபாய்க்கும், அமேசானில் வாங்கும் பொழுது, 6360 ரூபாய்க்கும், ப்ளிப்கார்ட்டில் வாங்கும் பொழுது, 7,499 ரூபாய்க்கும் விற்க்கப்படுகிறது.
அதே போல், என் 12 என்ற மாடலையும், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. என்11ல் உள்ள அனைத்தும் அப்படியே இருந்தாலும், ஒரு சில வசதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் செல்ஃபி கேமிரா 16 மெகாபிக்சல் திறனுடையது. அதே போல், இதன் ராம் 3 ஜிபி, ரோம் 32 ஜிபி, என பட்டையக் கிளப்பும் அம்சத்துடன் வெளியாகி உள்ளது. இதன் விலை, அமேசானில் சுமார் 6,995 ரூபாய்க்கும், ப்ளிப்கார்ட்டில், 8499 ரூபாய்க்கும் விற்க்கப்படுகிறது.
பட்ஜெட் ஸ்மார்ட் போன் வாங்க நினைப்பவர்கள், இந்த ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி அதிகளவில் பணத்தினை சேமிக்கலாம். ஒரு விஷயம், தற்பொழுது வெளியாகி உள்ள பல ஸ்மார்ட்போன்கள், அதிக விலையில், இந்த போனில் உள்ள வசதிகளையே வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.