இந்திய போன்களை காலி செய்த சீன ஸ்மார்ட்போன்கள்! காரணம் என்ன? ஒரு பார்வை!

19 September 2019 தொழில்நுட்பம்
mircomax.jpg

மைக்ரோமேக்ஸ், கார்பன், செல்கான் உள்ளிட்ட பல மொபைல் கம்பெனிகள் தற்பொழுது உற்பத்தியை நிறுத்திவிட்டன. இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, சீனாவினைச் சேர்ந்த, ரெட் மீ, ஒன் பிளஸ் உள்ளிட்ட போன்களே எனக் கூறினால் அது மிகையாகாது. அதே சமயம், இதனை மட்டும் காரணமாகக் கூற முடியாது.

இந்த மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட போன்களை பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை. 2012ம் ஆண்டு இந்த போன் கம்பெனியின் மதிப்பு சுமார், 21,500 கோடி ஆகும். ஆனால், தற்பொழுது இதன் மதிப்பு வெறும் 1,500 கோடி ரூபாய்.

தொடர்ந்து, கடைத்தட்டு மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் நல்ல தரமானதாகவும் இருந்து வந்தன. இன்னும் உண்மையைக் கூறினால், சாம்சங் போன்ற பெரிய நிறுவனங்களே, இந்த மைக்ரோமேக்ஸ் போன்களைப் போட்டியாகப் பார்த்தன. வியாபாரமும் அதிகரித்து.

மேலும், 4ஜி அறிமுகமான சமயத்தில், சீனாவின் பல போன் நிறுவனங்கள் விலைக் குறைவாகவும், அதே சமயம் அதிக வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியும், மக்கள் அந்த போன்களின் பக்கம் திரும்பினர்.

இதனால், இந்திய போன் நிறுவனங்களின் உற்பத்திக் குறைந்தது. மேலும், நம் நாட்டினைச் சேர்ந்த போன் நிறுவனங்களால், பெரிய அளவில் புதியத் தொழில்நுட்பத்தினை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த இயலவில்லை. அதிக அளவில் ரேம், கேமிரா வசதிகள், மெமரி வசதி, பெரிய திரை, வேகமாக செயல்படும் திறன் காரணமாக, ரெட்மீ உள்ளிட்ட சீனப் போன்களின் வியாபாரம் அதிகரித்தது. அதற்கு எதிர்மறையாக, குறைந்த ரேம், குறைந்த கேமிரா வசதி மற்றும் குறைந்த மெமரி வசதி கொண்ட, இந்திய போன்களின் வியாபாரம் குறைந்தது.

இந்நிலையில், 4ஜி சேவையை மிக மலிவான விலையில், ஜியோ நிறுவனம் அறிவித்ததால், கிட்டத்தட்ட இந்தியாவில் பாதிக்கும் மேலானோர், 4ஜி வசதியுள்ள ஸ்மார்ட்போன்களுக்கு மாறினார். இதனால், இந்திய போன்களின் வியாபாரம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இருப்பினும், 4ஜி சேவையை வழங்கும், போன்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எது எப்படி இருப்பினும், ஒரு முறை வியாபாரத்தில் இருந்து, மக்கள் ஒதுக்கிவிட்டால், மீண்டும் அதனை மக்கள் தொடமாட்டார்கள் என்பதற்கு, நோக்கியா போன்களே உதாரணம்.

HOT NEWS