ரயில் டிக்கெட் அதிகமாக உள்ளது! தொழிலாளர்கள் வேதனை! பகீர் குற்றச்சாட்டு!

05 May 2020 அரசியல்
lockdownmigrant.jpg

சொந்த ஊர்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள், இந்திய இரயிலின் டிக்கெட் அதிகமாக உள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.

மே-17ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற பல ஊழியர்கள், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முடியாமல், தவித்து வந்தனர். அவர்களுக்காக, அதிக பாதுகாப்புடன் சமூக இடைவெளியினை பின்பற்றிபடி, இந்திய இரயில்கள் இயக்கப்படும் என மத்திய இரயில்வே அறிவித்தது.

இதனால், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்காக செல்வதற்கு, தங்களுடையப் பெயரினை பொதுமக்கள் பதிவு செய்தனர். தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் தங்களுடையப் பெயரினை பதிவு செய்துள்ளனர். இந்த சூழ்நிலையில், டிக்கெட் எடுக்கச் சென்ற பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பலரும், தற்பொழுது பீகாரில் இருந்து குஜராத்திற்கு இரயில் இயக்கப்பட்டது.

அதற்கான டிக்கெட் விலையானது, 725 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சாதாரண நாட்களில், 650 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்பட்டதாகவும், தற்பொழுது இந்த விலைக்கு விற்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, 700 ரூபாய்க்கு என டிக்கெட்டினை அறிவித்துவிட்டு, கூடுதலாக 25 ரூபாயினை வாங்குகின்றனர் எனவும் புலம்புகின்றனர். அதே போல், ரயிலில் போதுமான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

எது எப்படி இருந்தாலும், நாங்கள் எங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும். இருப்பினும், பயணத்தின் பொழுது உணவு கிடைத்தால், மிகவும் நன்றாக இருக்கும் என்று வேதனைத் தெரிவிக்கின்றனர். இதனிடையே, புலம்பெயரும் ஊழியர்களுக்காக, மத்திய அரசு அவர்களின் பயணக் கட்டணத்தில் 85% கட்டணத்தினையும், மாநில அரசுகள் 15% கட்டணத்தினையும் செலுத்தும் என்று இரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

காங்கிரஸ் தரப்பில், புலம்பெயரும் ஊழியர்களுக்கான டிக்கெட் செலவினை தாங்களே ஏற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS