பாகிஸ்தானில், பெட்ரோலைத் தாண்டியது பாலின் விலை! பொதுமக்கள் கவலை!

11 September 2019 அரசியல்
milk.jpg

பாகிஸ்தானைப் பற்றி, பாகிஸ்தானில் செய்திகள் வருகின்றதோ, இல்லையோ, நம் நாட்டில் தான் அதிகளவில் செய்திகள் வருகின்றன.

அங்கு தீவிரவாதப் பிரச்சனைகள் தலைவிரித்து ஆடுவதாக, அந்நாட்டு மக்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதனைப் பிரதிபலிக்கும் விதமாகவே, அந்நாட்டில் உள்ள முன்னாள் எம்எல்ஏ பேசியும் உள்ளார். இந்நிலையில், அங்குள்ள பொருளாதாரப் பிரச்சனையும், தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மொகரம் பண்டிகையை ஒட்டி, அங்குள்ள மக்கள், பலகாரங்கள், இனிப்பு வகைகள் செய்வதற்குப் பாலைப் பயன்படுத்துவர். இதனை முன்னிட்டு, அங்கு பாலின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 113 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் விலை 91 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. ஆனால் பாலின் விலையைக் கேட்டால், நீங்கள் மிரண்டு விடுவீர்கள். ஆம் ஒரு லிட்டர் பாலின் விலை, 120 முதல் 140 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

HOT NEWS