அரியர்ஸ் மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் வழங்க முடிவு!

03 September 2020 அரசியல்
annauniversity.jpg

தமிழகத்தில் அரியர்ஸ் வைத்த மாணவர்களுக்கு, குறைந்தப்பட்ச மதிப்பெண் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவி வருகின்ற காரணத்தால், இந்திய அளவில் பல்கலைக் கழகத் தேர்வுகள் நடைபெறாமல் உள்ளன. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் கடைசிப் பருவத் தேர்வினைத் தவிர்த்து, பிற தேர்வுகள் அனைத்தும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும், அரியர் தேர்விற்காக பணம் கட்டியிருக்கும் மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்தார்.

இதனால், மாணவர்கள் பலரும் அவருடைய அறிவிப்பினை கொண்டாடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தேர்வுக் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு கட்டணம் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், அரியர் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. பல லட்சம் மாணவர்கள் இதற்கு முந்தைய அரியர் தேர்விலும் குறைந்த மதிப்பெண்களே எடுத்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில், தற்பொழுது புதிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. அதனடிப்படையில், அரியர் தேர்விற்கு பணம் கட்டியிருந்த மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்களை வழங்கி, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒருவேளை அதிக மதிப்பெண்கள் வேண்டும் என நினைத்தால், அடுத்து நடைபெறும் தேர்வினை எழுதி மதிப்பெண் எடுத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

HOT NEWS