ராகுல் காந்தியுடன் மேடையில் அமர்ந்து இருந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி இணைந்துள்ளார். மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகள், டெல்லி நோக்கிப் பிரம்மாண்டப் பேரணி நடத்தத் திட்டமிட்டு உள்ளனர். அதற்காக தற்பொழுது ஹரியானா பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், அங்கு தற்காலிக மேடைகளை அமைத்து, அங்கு உரையாற்றியும் வருகின்றனர். அங்கு ராகுல் காந்தியுடன் பல காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் அமர்ந்து இருந்தனர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கொரோனா வைரஸிற்காக அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கானது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில், ராகுல் காந்தி இருந்த மேடையில், அமர்ந்திருந்த பால்பீர் சிங் சித்துவிற்கு தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
அவர் தற்பொழுது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். அவருடன் தொடர்பில் இருந்த பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் மற்றும் ராகுலுக்கு கொரோனா பரவியிருக்கலாம் எனப் பலரும் கவலைத் தெரிவித்து வருகின்றனர்.