விரைவில் கோமியமும் மருத்துவப் பொருளாகா மாறுவதற்கு வாய்ப்பு! அமைச்சர் தகவல்!

08 September 2019 அரசியல்
cow.jpg

முதலில் பசுவதைத் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அதுமுதல், பசு மற்றும் மாட்டிறைச்சி முற்றிலும் நம் நாட்டில் தடை செய்யப்பட்டது. மேலும், வட இந்தியாவில், பசுப் பாதுகாவலர்கள் மூலம், பல கொலைகளும் நடந்துள்ளது நாடே அறிந்த விஷயம்.

இதனிடையே தற்பொழுது, பாஜக கட்சி உறுப்பினரும், மத்திய இணை அமைச்சருமான திரு. அஸ்வினி குமார் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். அவர் நேற்று கோவையில் நடைபெற்ற, தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரம்பரியா சிகிச்சை முறைகளான, யோகா மற்றும் சித்தா ஆகியவைகளை ஊக்குவிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் பேசினார்.

மேலும் பேசிய அவர், மாட்டின் கோமியத்தினை மருத்துவப் பொருளாக அறிவிக்கப் போவதாகவும், அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். தமிழகத்தில், சேலம், மதுரை மற்றும் தஞ்சையில் உள்ள மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்கு, நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

HOT NEWS