கொரோனா பீதியிலும் ஏவுகணை சோதனை! கிம்மின் அட்டூழியம் தாங்க முடியல!

11 March 2020 அரசியல்
missiletestnk.jpg

உலகமே கொரோனா வைரஸிற்குப் பயந்து கொண்டு, வீட்டை விட்டு வெளியில் வராமல் உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், வடகொரியா ஏவுகணை சோதனையினைச் செய்துள்ளது. இதனை அந்நாட்டின், செய்தி நிறுவனங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளன.

வடகொரியா நாடானது, தன்னுடைய வடகிழக்கு கடற்பகுதியில், கடந்த திங்கட்கிழமை அன்று, மூன்று அதிநவீன பொருட்களை வானில் ஏவியுள்ளது. இதனை, அந்நாட்டு மக்கள் டிவியில் கண்டுகளித்துள்ளனர். இந்த ஏவுகணைச் சோதனையின் காரணமாக, தென் கொரியா ஆட்டம் கண்டு போய் உள்ளது. எப்படியாவது, தென் கொரியாவினை தன்னுடன் இணைத்துக் கொண்டு, கொரிய தீபகற்பத்தினை உருவாக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், வடகொரிய அதிபர் இவ்வாறு செய்து வருகின்றார்.

இதனை தற்பொழுது, தென் கொரிய இராணுவமானது, தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது. இரண்டு முறை ஏவப்பட்டதில், மொத்தம் மூன்று ஏவுகணைகள் வானில் பறந்துள்ளன. இருப்பினும், இந்த ஏவுகணைகள் எத்தகையது என்பது பற்றியும், இதன் பயன் என்ன என்பது பற்றியும் யாருக்கும் இதுவரைத் தெரியவில்லை.

இதற்கு, ஐரோப்பிய நாடுகள் சபையினை, தற்பொழுது தென் கொரிய நாடானது நாடியுள்ளது. ஏற்கனவே, வடகொரிய நாட்டின் இராணுவ மற்றும் அணு குண்டு சோதனைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. அமெரிக்காவின் அச்சுறுத்தல் வேறு, வடகொரியாவிற்கு இருக்கின்ற காரணத்தால், தொடர்ந்து வட கொரிய இராணுவம் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

HOT NEWS