ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேர் தினமும் இந்தியாவில் பாதிக்கப்படுவர்! பகீர் ரிப்போர்ட்!

09 July 2020 அரசியல்
lockdownmigrant.jpg

கொரோனாவால் 2021ம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் தினமும் 2.87 லட்சம் பேர் பாதிக்கப்படுவர் என்னும் பகீர் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இந்தியா முழுக்க தற்பொழுது கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், இந்தியாவில் தற்பொழுது மட்டும் சுமார் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பாதிப்பில் இருந்து, சுமார் 4,60,000 பேர் குணமாகி உள்ளனர். 20,642 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்த நோய் தொற்றானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் மஸ்ஸாசெஸெட்ஸ் இன்ஸ்ட்டியூட்ஸ் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக் கழகமானது, புதியா ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. அதில், இந்தியாவில் கொரோனா தொற்று குறித்தும், அதன் பாதிப்பு குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆராய்ச்சியின் முடிவுகளைத் தற்பொழுது அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2021ம் ஆண்டு கோடைக் காலத்திற்கு முன்பே, இந்தியாவில் தினமும் 2.87 லட்சம் பேர் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவர் எனவும், அப்பொழுது இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1.15 லட்சம் பேர் பலியாகி இருப்பர் எனக் கணித்துள்ளது. அதே போல், அமெரிக்காவில் தினமும் 95,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர் எனவும், தென் ஆப்பிரிக்காவில் 20,600 பேர் பாதிக்கப்படுவர் எனவும், ஈரானில் 17,000 பேர், இந்தோனேஷியாவில் 13,200 பேர், லண்டனில் 4,200 பேர், நைஜீரியாவில் 4,000 பேர், துருக்கியில் 4,000 பேர், ஜெர்மனியில் 3,000 மற்றும் பிரான்சில் 3,300 பேர் பாதிக்கப்படுவர் எனக் கணித்துள்ளது.

உலகிலேயே இந்தியாவில் தான் அதிக நபர்கள் பாதிக்கப்படுவர் என்றுக் கூறியுள்ள அந்தப் பல்கலைக் கழகம், இதற்கு மருந்து கண்டிபிடிக்காவிட்டால் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றுக் கூறியுள்ளது. உலகம் 2021ம் ஆண்டின் வசந்த காலத்திற்குள் இந்த வைரஸால், 24 கோடியே 90 லட்சம் பேர் பாதிக்கப்படுவர் எனவும், அதே போல் பலியானவர்களின் எண்ணிக்கையானது 17.5 லட்சமாகவும் இருக்கும் எனக் கணித்துள்ளது. இந்த வைரஸால் 84 நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

HOT NEWS