வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், புதியக் கட்சியினை ஆரம்பிப்பது குறித்தும் முக அழகிரி தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகின்றார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக அழகிரி, தொடர்ந்து திமுகவிற்கு எதிராகப் பலமுறை பேசியிருக்கின்றார். இந்த சூழலில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக படுதோல்வி அடையும் எனவும், மூன்றாவது இடத்தில் தான் அந்தக் கட்சி இருக்கும் எனவும், முக அழகிரி பேசி வந்தார். ஆனால், அவர் எதிர்பார்க்காத வகையில் திமுக அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது. இதனை முக அழகிரியின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கவில்லை.
இந்த சூழலில், இன்று தன்னுடைய ஆதரவாளர்கள் சுமார் 10,000க்கும் அதிகமானோருக்கு புதிய அழைப்பு ஒன்றினை அழகிரி தரப்பில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளது. அதன்படி, இன்று தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை செய்கின்றார் அழகிரி. அதனைத் தொடர்ந்து புதியக் கட்சியினை ஆரம்பிக்கலாமா அல்லது திமுகவுடன் இணக்கமாக செல்லலாமா என பேச உள்ளார்.