வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் என்னுடையப் பங்களிப்பானது, நிச்சயம் இருக்கும் என முக அழகிரி கூறியுள்ளார்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், பாஜகவில் நான் சேர இருப்பதாக வெளியானத் தகவல்கள் அனைத்தும் வதந்தி. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் என்னுடையப் பங்களிப்பானது நிச்சயம் இருக்கும் என்றுக் கூறினார். நீங்கள் புதியக் கட்சித் துவங்க உள்ளீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அழகிரி, அது போகப் போகத்தான் தெரியும். என்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்தப் பின்னரே, இது குறித்து கூறுவேன் என்றுக் கூறியுள்ளார்.